முதல் இடத்தில் கெத்து காட்டும் சன் டிவி.. அடித்துப் பிடித்து டாப் 5 லிஸ்டில் நுழைந்த விஜய் டிவி.. இந்த வார TRB லிஸ்ட்..!

By Nanthini on சித்திரை 25, 2025

Spread the love

தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரையில் சீரியல்களின் வெற்றியோ அல்லது தோல்வியோ அதன் டிஆர்பி ரேட்டிகை வைத்து தான் மதிப்பிடப்படுகின்றது. ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலும் சன் டிவி சீரியல்கள் தான் முதலிடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. அதன்படி 2025 ஆம் ஆண்டின் 15ஆவது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல சன் டிவி சீரியல்கள் முதலிடத்தை ஆக்கிரமித்தாலும் அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களும் வரிசை கட்டி நிற்கிறது.

சந்தியா ராகம்' தொடரில் நாயகி மாற்றம் | Change of heroine in 'Sandiya Ragam'  serial - hindutamil.in

   

சந்தியா ராகம்:

   

கடந்த வாரம் ஜீ தமிழில் அண்ணா சீரியல் பத்தாவது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த வாரம் ஜீ தமிழில் மற்றொரு சூப்பர் ஹிட் சீரியல் ஆன சந்தியா ராகம் சீரியல் 5.29 டிஆர்பி ரேட்டிங் பெற்று 10-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ்: வீட்டை விட்டு போன பாண்டியன்.. கடைசியாக போட்ட அந்த  கட்டளை.. அதிர்ச்சியில் மகன்கள் | Vijay TV's Pandian Stores Season 2 Promo  (March 20-22) Released ...

பாண்டியன் ஸ்டோர்ஸ், அய்யனார் துணை:

இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தைப் போல இந்த வாரம் எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களை விஜய் டிவி சீரியல்கள் பிடித்துள்ளன. அதாவது 6.70 டிஆர்பி புள்ளிகளை பெற்று அய்யனார் துணை சீரியல் எட்டாவது இடத்தையும் அடுத்ததாக 6.10 டிஆர்பி புள்ளிகளை பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் அய்யனார் துரை சீரியல் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Siragadikka Aasai | 1st to 6th April 2024 - Promo

சிறகடிக்க ஆசை:

டாப் 10 ரேசியில் முதல் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்தாலும் சிறகடிக்க ஆசை சீரியல் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்து வந்தது நிலையில் இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு டாப் 10 பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Marumagal serial: 'கல்யாணத்திற்கு மட்டை போடும் மனோகரி.. உச்சக்கட்ட  கோபத்தில் சிவப்பிரகாசம்- மருமகள் சீரியலில் இன்று!

மருமகள்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த நிலையில்  இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.87 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருக்கிறது.

கயல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

கயல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரமும் டிஆர்பி-யில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரம் 8.93 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மூன்று முடிச்சு' தொடரில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. எகிறுமா டிஆர்பி? -  தமிழ் News - IndiaGlitz.com

மூன்று முடிச்சு:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் மக்களின் பேராதரவுடன் 8.89 புள்ளிகளை பெற்று டிஆர்பி யில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
வார்டன் பேசிய விஷயம்..போராட துணிந்த ஆனந்தி..சிங்க பெண்ணே லேட்டஸ்ட்  அப்டேட்..! - warden encourages anandhi singapenne seriyal episode preview -  Samayam Tamil

சிங்க பெண்ணே:

  சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்ட சிங்கப் பெண்ணே சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் 9.27 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.