தமிழகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் TWEES (TN women entrepreneurs empowerment scheme) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ரேஷன் கார்டு உள்ள 18 முதல் 55 வயது பெண்கள் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி எதுவும் கிடையாது. ஆனால் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க முடியும்.
கடனுதவியோடு, தொழில் வளர்ச்சிக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. அதாவது, தொழில் தொடங்கும் முறைகள், வணிகத் திட்டம் எழுதுவது, நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவை அடங்கி தொழில் முனைவோர் பயிற்சி 3 நாட்களுக்கு இணையவழி மூலம் வழங்கப்படுகிறது. ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதால், பெண்கள் வேறு கடன் விருப்பங்களை தேடாமல், தொழில்களை எளிதாக தொடங்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
