வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாற்றியவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. பல வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இருப்பதால் தகுதியான வாக்காளர்களை மட்டுமே பட்டியலில் இடம்பெற செய்யவும் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்பதற்காகவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நவம்பர் 4 நாளை முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையுடன் அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த பணிகள் முடிவடைந்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் ஒன்பதாம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதியும் வெளியிடப்படும். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் அதற்கான ஆவணங்களை டிசம்பர் 7ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
