அரசு பேருந்துகளில் ‘நோ சவுண்ட்’ பாலிசி அமல்… பஸ் பயணிகளுக்கு செக்மேட்… ரீல்ஸ் பாக்குறீங்களா?… போலீஸ் ஃபைன் கன்பார்ம்… அதிரடி ரூல்ஸ் போட்ட போக்குவரத்து துறை…!

By Visaka on ஆடி 28, 2026

Spread the love

மேலும், சக பயணிகளுக்கு எந்தவிதமான அசௌகரியமும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் யாராவது பாடல்களோ அல்லது வீடியோக்களோ கேட்க விரும்பினால், ஹெட்போன், இயர்போன் அல்லது ப்ளூடூத் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அவ்வாறு பயன்படுத்தாமல் உரத்த ஒலியில் கேட்பது சட்டப்படி குற்றமாகும். மோட்டார் வாகன ஒழுங்குமுறை விதிகள் 2017 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் விதிகள் 1989 (விதி 228)-ன் கீழ், பயணிகளுக்குத் தொந்தரவு தரும் இதுபோன்ற செயல்கள் கடுமையான விதிமீறல்களாகக் கருதப்படும் எனத் போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல்ராஜ் அனைத்துப் போக்குவரத்து கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தப் புதிய விதிகள் குறித்த விழிப்புணர்வை அனைத்துப் பயணிகளிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக, அரசுப் பேருந்துகளின் முன்பகுதி, நடுப்பகுதி மற்றும் பின் பகுதிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என்றும் தலைமைச் செயலகப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் எந்தவிதச் சத்தமும் இன்றி மிகவும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான பயண அனுபவத்தைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.