“ஆட்சிக்கு வந்த 10 நாளிலேயே.. விஜய்க்கு எதார்த்தத்தை உணர்த்திய தமிழகம்.. ஆரம்பத்திலேயே வந்த அடுக்கடுக்கான சோதனைகள்”…!!!

Spread the love

தமிழகத்தில் கோடைகால மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலிலும், மின்வாரிய அலுவலக முற்றுகையிலும் ஈடுபட்டு வருவது, ஆட்சிக்கு வந்த 10 நாட்களிலேயே தவெக அரசுக்கு நிர்வாக ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமன்றி, கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், கடந்த சில நாட்களில் நடந்துள்ள தொடர் கொலைகளும், காவல் துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

‘தூய்மையான அரசியல்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த வேகத்தில், சில தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வது, அரசு அலுவலகங்களில் அத்துமீறி ஆய்வு நடத்துவது போன்ற புகார்கள் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தன் சொந்தக் கட்சியினரின் இத்தகைய செயல்பாடுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய சவால் முதலமைச்சருக்கு எழுந்துள்ளது. அதேபோல், திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரமும், அதற்கு எதிராகச் செவிலியர்கள் நடத்திய போராட்டமும் புதிய அரசுக்குப் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

மறுபுறம், நெல்லை மாவட்ட அணைகளில் விவசாயத்திற்குப் போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் தவித்து வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டிய சூழல் வரவுள்ள நிலையில், டெல்டா விவசாயிகளும் தண்ணீருக்காகக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். கடந்த மே 21 அன்றுதான் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தங்களின் துறைகளைப் புரிந்து கொள்வதற்குள்ளேயே, மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், தண்ணீருக்காகப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தவெக தனிப் பெரும்பான்மை பெறாததால் (108 இடங்கள்), காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சியை விஜய் அமைத்துள்ளார். திமுக, அதிமுக போன்ற பல ஆண்டு கால அனுபவமிக்க கட்சிகளையே திணறடிக்கும் தமிழக நிர்வாகப் பொறுப்பை, முதன்முறையாகக் கையில் எடுத்திருக்கும் முதலமைச்சருக்கு இந்த நிலைமை கூடுதல் நெருக்கடியைத் தந்துள்ளது. சினிமாவில் 100 பேரை அடிப்பதை ரசிக்கும் மக்கள், நிஜ வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதையே எதிர்பார்ப்பார்கள் என்ற எதார்த்தத்தை உணர்ந்து, இந்தத் தொடக்கக்கால நெருக்கடிகளை விஜய் எப்படித் திறம்படக் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.

Muthu Mani

Recent Posts

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

4 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

6 minutes ago

பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…

7 minutes ago

“வெறும் 20 அடிதானே” 7 வயது சிறுவனை அடித்து கை, அந்தரங்க உறுப்பை உடைத்த கொடூர முதல்வர்… பெற்றோர்களிடம் சொன்ன அலட்சிய பதில்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…

23 minutes ago

BREAKING: நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி அதிரடி கைது..!!

மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின்…

29 minutes ago

‘ஓடுவதை நிறுத்து’.. ஓடும் ரயிலில் அநாகரிகம்.. 3 முறை தப்பாக தோட்ட காமுகன்.. பெண் கொடுத்த அதிரடி ‘நோஸ் கட்’.. இணையத்தில் வைரலாகும் ‘சிட்னி இரயில்’ மோதல் வீடியோ..!!

சிட்னியில் ஓடும் ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்பும் தற்பொழுது…

29 minutes ago