அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள அந்த ஒரு இடத்திற்கு ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தவெக-விற்குப் போதிய சட்டமன்ற உறுப்பினர்களின் (MLAs) பலம் சாதகமாக இருப்பதால், இந்த ஒரு இடத்தை அக்கட்சி எளிதாகக் கைப்பற்றும் சூழல் உள்ளது. இதன் மூலம் மத்தியில் முத்திரை பதிக்கத் துடிக்கும் தமிழக வெற்றிக் கழகம், நாடாளுமன்றத்தில் முதன்முறையாகத் தனது முதல் அடியை எடுத்து வைக்கப் பெரிதும் தயாராகி வருகிறது.
முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழையப் போகும் அந்த தவெக எம்.பி யார்? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே எகிறியுள்ள நிலையில், மூன்று முக்கிய பெயர்கள் பலத்த பரிசீலனையில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, விஜய்யின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஜய்யின் மிக நெருங்கிய நண்பரான ஜெகதீஷ் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. இவர்களில் ஒருவருக்குத்தான் நாடாளுமன்றம் செல்லும் அதிர்ஷ்டக் காற்று வீசப்போகிறது என்று கட்சிக்குள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தவெக பிரமுகர்கள் ரேஸில் இருக்கும்போதே, இந்த ராஜ்யசபா சீட்டை தங்களது கட்சிக்கு ஒதுக்குமாறு காங்கிரஸ் மேலிடம் தவெக-விடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் புதிய ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. குறிப்பாக, தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைவதற்குக் திரைமறைவில் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டவர் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி ஆவார். இதனால், அவருக்கு இந்த ராஜ்யசபா இடத்தை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் பலத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தவெக தலைமை இதனைத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமன்றி மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 மூத்த எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி தேசிய அளவிலும் இந்தத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் ஜூன் 8 வரையும், தேர்தல் ஜூன் 18 அன்றும் நடைபெறவுள்ளது. தவெக தனது சொந்தக் கட்சி நிர்வாகியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புமா அல்லது கூட்டணி தர்மத்திற்காக காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்திக்கு வழிவிடுமா என்ற விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்றாலும், முதல் வாய்ப்பைத் தவெக தவறவிடாது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப்…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு (JLN) அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக…
கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…
சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…