கணக்கில் வராத 2 லட்சம் வாக்குகள்?… மே 4-ல் வெளியாகப்போகும் ‘மெகா’ அதிர்ச்சி.. தமிழக தேர்தல் களத்தில் புதியபரபரப்பு …!

Spread the love

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தபால் வாக்குகள் தொடர்பான புள்ளிவிவரங்களில் ஏற்பட்டுள்ள முரண்பாடு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மாநிலம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பின்படி, அன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8:30 மணிக்கு மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. எனினும், தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையில் நிலவும் குழப்பம் தேர்தல் ஆணையத்தின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்ட சுமார் 3.60 லட்சம் அரசு ஊழியர்களில் 2.88 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தியதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறை மற்றும் இதர கண்காணிப்பு அதிகாரிகளின் 3.36 லட்சம் வாக்குகளும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் 1.73 லட்சம் வாக்குகளும் இதில் அடங்கும். இந்த மூன்று பிரிவுகளையும் கணக்கிட்டால் சுமார் 8.15 லட்சம் தபால் வாக்குகள் இருக்க வேண்டும். ஆனால், அதிகாரப்பூர்வ தகவலின்படி 6.37 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 லட்சம் வாக்குகள் வித்தியாசமே தற்போதைய சர்ச்சைக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த அதிகரித்த வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருபுறம் புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு வெற்றியைத் தீர்மானிக்கும் எனக் கருதப்பட்டாலும், மறுபுறம் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறவில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. தபால் வாக்குகள் தொடர்பான இந்தத் தெளிவற்ற சூழல், தேர்தல் முடிவுகளின் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களை அரசியல் கட்சிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

திமுக, அதிமுக, தவெக, மற்றும் நாம் தமிழர் எனப் பலமுனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், ஒவ்வொரு வாக்கும் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. குறிப்பாக, இழுபறி ஏற்படும் தொகுதிகளில் தபால் வாக்குகளே முடிவை மாற்றியமைக்கும் என்பதால், இந்த எண்ணிக்கை முரண்பாடு குறித்து தேர்தல் ஆணையம் விரைந்து விளக்கமளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து சர்ச்சைகளுக்கும் மே 4-ஆம் தேதி வெளியாகும் இறுதி முடிவுகள் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கும் என்பதால், தமிழகம் முழுவதும் இப்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

41 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 மணத்தியாலம் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

1 மணத்தியாலம் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

2 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago