ஆன்லைன் பொருட்களை விநியோகிக்கக்கூடிய தொழிலாளர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு 20,000 மானியம் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், வேகமாக வளர்ந்து வரும் இணையம் சார்ந்த பொருளாதார சூழலில் இணையம் சார்ந்த சேவை பணிகளில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இந்த தொழிலாளர்களின் நலனுக்காக இணையம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 2000 பேருக்கு புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு தலா ₹20,000 மானியமாக வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இணையம் சார்ந்த சேவை பணிகளில் ஈடுபடும் 2000 பேருக்கு 20000 ரூபாய் மானியமாக வழங்கும் திட்டத்திற்கு நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…