தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வந்த நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக ஏராளமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சுமார் 17 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு நேற்று ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பிறகு பேசிய அவர், நிச்சயம் மகளிர் உரிமை தொகையும் உயரும் என தெரிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை விரைவில் உயர்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2026 தேர்தலை முன்னிட்டு 2000 முதல் 2500 வரை மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
