தவெக ஆட்சியில் முதல் பட்ஜெட்… அதிர்ந்த தமிழ்நாடு…. ஆகஸ்ட் 5-ல் விஜய் செய்யப் போகும் மாஸ் சம்பவம்.. வெளியான அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 21, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், 2026-27ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் புதிய அரசின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்ற நிலையில், கவர்னர் உரைக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, புதிய அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும், மறுநாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். விவாதங்களின் முடிவில் அமைச்சர்களின் பதிலுரையும், அதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடைபெறவுள்ளன.

   

புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, முதலமைச்சர் விஜய் துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக பட்ஜெட் தொடர்பான தீவிர ஆலோசனைகளையும், துறை ரீதியிலான ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி வந்துள்ளார். தவெக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு புதிய திட்டங்கள் இதில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் விவசாயத் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

மேலும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நேரலை செய்யப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். கடந்த கூட்டத்தொடரின் போது நேரலையில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், இம்முறை எந்தவித தடையுமின்றி அவை நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட் கூட்டத்தொடர் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.