இரவில் பணம் வந்தது… 234 தொகுதிகளுக்கும் ரூ.828 கோடி ஒதுக்கீடு… CM விஜய் இன்ப அதிர்ச்சி… !

By Nanthini on ஆவணி 12, 2026

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளின் மேம்பாட்டிற்காக, தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.828.36 கோடி நிதியை மாநில அரசு விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் ஆண்டுக்கு ரூ.3.54 கோடி வீதம் நிதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

மக்களின் உடனடி மற்றும் அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நிலுவையில் உள்ள தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை எவ்விதத் தாமதமுமின்றி விரைவுபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை வசதி, குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு, ஒவ்வொரு தொகுதியும் தங்கு தடையின்றி விரைவான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.