நமது நாட்டின் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி [வெள்ளிக்கிழமை] கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து கிளம்புவார்கள். இந்த நிலையில் சொந்த ஊருக்களுக்காக செல்லும் பயணிகளுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
15/06/2025 அன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு; 13/08/2025 அன்று சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்வதற்காக கூடுதலான பேருந்துகளை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/08/2025 [புதன்கிழமை] அன்று 570 பேருந்துகளும். 15/08/2025 [வெள்ளிக்கிழமை] மற்றும் 18/08/2025 [சனிக்கிழமை] 375 பேருந்துகளும் இயக்க திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/08/2025 [வியாழக்கிழமை] அன்று 100 பேருந்துகளும் மற்றும் 15/08/2025 ஆகிய [வெள்ளிக்கிழமை] அன்று 90 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 14/08/2025 மற்றும் 15/08/2025 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
சொந்த ஊரிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்காக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 17/08/2025 [ஞாயிற்றுக்கிழமை] அன்று 715 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிட்டுள்ளது. இந்த வார இறுதியில் [புதன்கிழமை] அன்று 8,145 பயணிகளும், [வியாழக்கிழமை] அன்று 26, 534 பயணிகளும், [வெள்ளிக்கிழமை] அன்று 5,004 பயணிகளும், [சனிக்கிழமை] 3,676 பயணிகளும் மற்றும்[ ஞாயிற்றுக்கிழமை ] அன்று 23,268 பயணிகளும் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணியுங்கள். Www.tnstc.in மற்றும் Mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்சிறப்பு பேருந்துகளை இயக்க, கண்காணிக்க பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
