இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இளைஞர்கள் மத்தியில் சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிக்க தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு அரசு சார்பில் 1.5 கோடி கடன் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் மாநில நிதிக்கழகம் மூலமாக எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் உதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கின்றது.
இந்த TIIC அமைப்பு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவ மற்றும் விரிவுபடுத்த பல சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்குகிறது. அதன்படி திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஜூன் 2 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாநில அளவில் நடப்பு நிதியாண்டின் கடன் இலக்காக 2117 போடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தொழில் கடன் முகாமில் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்படும். தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியமும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் எஸ்சி எஸ்டி தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவீதம் முதலீட்டு மானியம் மற்றும் ஆறு சதவீதம் வட்டியுடன் கடன் உதவி வழங்கப்படும். இந்த முகாம் குறித்து மேலும் கூடுதல் தகவல்களை அறிய 9962622939, 9445023477 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
