தமிழ்நாடு அரசு, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமருதியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1,000 வழங்குகிறது. 2026 பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3,000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
