பேருந்துகளில் 2 மாதம் இலவசமாக பயணிக்கலாம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை இணையதளம் மூலமாக உடனுக்குடன் பெரும் வசதியை அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் நடைமுறைப்படுத்த தேவையான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதனை முழுமையாக செயல்படுத்துவதற்கு மாவட்ட அளவில் முகாம்கள் நடத்த வேண்டி இருப்பதால் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை டிசம்பர் 31ஆம் தேதி வரை மேலும் 2 மாத காலத்திற்கு நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

   

இந்தத் திட்டத்தின் மூலமாக எந்தவித சிரமமும் இல்லாமல் பயனாளிகள் தங்களுடைய இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு இ சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம். இதனை செயல்படுத்த மாவட்ட அளவில் முகாம்கள் நடத்த வேண்டி இருப்பதால் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை டிசம்பர் 31ஆம் தேதி வரை மேலும் 2 மாத காலத்திற்கு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.