தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மார்ச் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து வரும் பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்களாகப் பணியாற்றவுள்ள IAS, IPS அதிகாரிகள் மற்றும் மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு, தேர்தலுக்கான இறுதி கால அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
