சொன்னது மொத்தம் 717 கடை.. ஆனா இப்போ மூடப்பட்டது இத்தனை தானா?…. அரசே வெளியிட்ட பகீர் தகவல்… வெளியான அதிகாரப்பூர்வ லிஸ்ட்….!

Spread the love

தமிழக முதல்வராகத் தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற மறுநாளே (மே 11, 2026), மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட அதிரடி உத்தரவிட்டார். முதல்வரின் இந்த மக்கள் நலன் சார்ந்த அதிரடி முடிவுக்குத் தமிழக மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடம் பெரும் வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்தன.

இருப்பினும், முதல்வர் விதித்த இரண்டு வாரக் கெடு நிறைவடைய உள்ள நிலையில், அனைத்துக் கடைகளும் இன்னும் மூடப்படவில்லை என்ற பேச்சு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) தலைமை அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் மே 23 அன்று உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, கடைகள் மூடல் குறித்த தற்போதைய நிலவரத்தை அரசு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பின்படி, முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதுவரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அவற்றுடன் இணைந்து செயல்பட்டு வந்த மதுக்கூடங்களும் (பார்கள்) முழுமையாக மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 281 டாஸ்மாக் கடைகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உடனடியாக மூடுவதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும், மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளர்களின் வாழ்வாதாரமும் நலனும் பாதிக்கப்படாத வகையில், அவர்களை அருகில் உள்ள மற்ற டாஸ்மாக் கடைகளில் மறுபணியமர்த்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இரவு 10.00 மணிக்குக் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும், மதுபானங்களை அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) விட கூடுதல் விலைக்கு விற்கும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. முதலமைச்சர் விஜய் கொடுத்த இரண்டு நாள் அவகாசம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைவதால், மீதமுள்ள 281 கடைகளும் அதற்குள் மூடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

Nanthini

Recent Posts

“நான் சொல்றதைத்தான் அவர் செய்வார்!”.. இஸ்ரேல் பிரதமரை ஒற்றை வார்த்தையில் அடக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. ஈரான் விவகாரத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!

ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க…

26 minutes ago

டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!.. 12,256 காலிப் பணியிடங்கள்.. SSC வெளியிட்ட மெகா அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

பணியாளர் தேர்வாணையம் (SSC), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப்…

35 minutes ago

“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்!”.. போலீசுக்கு போன் செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற…

49 minutes ago

“தோனி இல்லாத சிஎஸ்கே அவ்வளவுதானா?.. அடுத்த 5 வருஷத்துக்கு கப் கிடையாது?.. அதிரவைக்கும் முன்னாள் வீரரின் கணிப்பு”..!!

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக நிலைத்தன்மையின் அடையாளமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும்…

57 minutes ago

“அடுத்த 24 மணி நேரத்தில் உலக வரைபடம் மாறப்போகிறதா?”… அமெரிக்கா – ஈரான் எடுத்த அந்த ஒற்றை முடிவு… திரைக்குப் பின்னால் நடந்த நள்ளிரவுப் பேச்சுவார்த்தை….!

உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…

1 மணத்தியாலம் ago

“சிஎம் விஜய் போட்ட ரகசிய உத்தரவு”…. தமிழகத்தில் நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்… அதிர்ந்து போன அதிகாரிகள்…!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…

1 மணத்தியாலம் ago