பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… உடனே செக் பண்ணுங்க..!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை இந்த மாதம் தொடக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு இருந்தார். அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி நிறைவடைகிறது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி நிறைவடைகின்றது. நடப்பு கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வு துறை தயார் செய்கிறது.

இதனைத் தொடர்ந்து கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், செல்போனி எண் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும் அதில் திருத்தம் இருந்தால் மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் நவம்பர் 19ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவகாசம் நவம்பர் 27 வரை வழங்கப்பட்டது. தற்போது அதற்கான அவகாசத்தை நீட்டித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

   

அதன்படி டிசம்பர் 5ஆம் தேதிக்குள் விவரங்களை சரிபார்க்கவும் திருத்தங்கள் இருந்தால் அதனை மேற்கொள்வதற்கும், விவரங்களைப் பிறகு பதிவேற்றம் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெயர் விவரங்களில் திருத்தம் செய்ய இதுவே இறுதிவாய்ப்பாகும். இதனை தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதாவது தவறுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் தான் பொறுப்பேற்க நேரிடும் என்று தேர்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.