CM விஜயை முகநூலில் வம்புக்கு இழுத்த திமுகவினர்… அந்த ஒரு பிளக்ஸ் பேனர்… ஒட்டுமொத்த கோவையையும் அதிரவைத்த தவெக… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. திமுகவின் பலமான கூட்டணி உடைந்து காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக ஆகியவை வெளியேறிய நிலையில், புதிதாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, “தமிழகத்தில் போட்டி திமுக மற்றும் தவெக இடையேதான்” என்று தவெக தலைவர் விஜய் முழங்கியபோது, அதனைப் பொருட்படுத்தாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களுக்குள் மட்டுமே பரஸ்பரம் விமர்சித்து வந்தன. மேலும், இந்த தேர்தலை “தமிழகத்திற்கும் டெல்லிக்குமான தேர்தல்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் வர்ணித்திருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் தவெகவிற்கு சாதகமாக வந்து அக்கட்சி ஆட்சி அமைத்தது, பாரம்பரிய திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இருதரப்பிற்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தேர்தலில் நமக்கான உண்மையான எதிரி யார் என்பதை நிர்ணயிக்கத் தவறிவிட்டோம்” என்று தற்போதைய திமுக தலைவர்கள் புலம்பும் அளவுக்கு தமிழக அரசியல் களம் இப்போது ‘தவெக Vs திமுக’ என்று முழுமையாக மாறியுள்ளது.

இதனிடையே, தவெகவின் ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என திமுக தொடர்ந்து விமர்சித்து வர, தங்களது ஆட்சியை கவிழ்க்க திமுக சதி செய்வதாக தவெக பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் பேச முயன்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. புதிய தவெக அரசுக்கு எதிராக திமுக தொடர் போராட்டங்களை அறிவித்துள்ள சூழலில், இரு தரப்புக்கு இடையேயான இந்த மோதல் தற்போது அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பது தொடர்பாக பிளக்ஸ் பேனர் வைப்பதில் திமுக மற்றும் தவெகவினரிடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக நிர்வாகிகள் சிலர் தங்களது முகநூல்பக்கங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி தவெக நிர்வாகி பாலாஜி அளித்த புகாரின் பேரில், மதுக்கரை போலீசார் குரும்பபாளையத்தைச் சேர்ந்த திமுகவினர் விஷ்ணுபிரபு, மனோஜ்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் திருச்சியில் தங்கியிருந்த விஷ்ணுபிரபு மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்; தலைமறைவாக உள்ள மணிகண்டனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Visaka

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago