மும்பையில் வாடகைக்கு வீடு தேடிய நபர் ஒருவரை, அவரது பிறந்த தேதியின் கூட்டு எண் வீட்டின் உரிமையாளருக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக நிராகரித்த விசித்திரமான சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளருடன் வாடகைதாரர் வாட்ஸ்அப்பில் பேசிய உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
அந்த உரையாடலில், வீட்டின் உரிமையாளர் வாடகைதாரரின் பிறந்த தேதியைக் கேட்டுள்ளார். அவர் தனது பிறந்த தேதியைக் குறிப்பிட்டதும், அதன் கூட்டு எண் தனக்குச் செட் ஆகாது என்றும், எண் கணிதப்படி அந்த எண் தங்களுக்குப் பொருந்தவில்லை என்றும் கூறி வீட்டை வாடகைக்குத் தர மறுத்துள்ளார். மும்பை போன்ற பெருநகரங்களில் பொதுவாகவே சாதி, மதம், உணவுப் பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வீடுகள் மறுக்கப்படுவது வழக்கம் என்றாலும், தற்போது ‘நியூமராலஜி’ என்ற புதிய காரணம் சேர்க்கப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
https://www.instagram.com/reel/DaVnooRy4VL/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “மும்பையில் வீடு தேடுவதே ஒரு பெரிய சவாலாக இருக்கும் நிலையில், இப்போது எண் கணிதத்தையும் பார்க்க வேண்டுமா?” என்று நெட்டிசன்கள் கிண்டலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இதுபோன்ற விசித்திரமான மற்றும் நியாயமற்ற காரணங்களுக்காக மக்களை நிராகரிக்கும் உரிமையாளர்களின் போக்கைக் கண்டித்தும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…
கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…
கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…
கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…