BIG BREAKING: இன்னும் சற்று நேரத்தில்… 5.6 கோடி வாக்காளர்கள், 4000 வேட்பாளர்கள்: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் அந்த ‘ஒரு’ நாள்…!

By Nanthini on சித்திரை 23, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் பொதுமக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்குத் தேவையான அனைத்து விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கிடையே ஒரு வலுவான நான்கு முனைப் போட்டி நிலவுவதால் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் 5.6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள சூழலில், 4,000-க்கும் அதிகமான வேட்பாளர்களின் தலையெழுத்தை மக்கள் இன்று நிர்ணயிக்கின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்த வாக்குப்பதிவில், தங்களின் வாக்குகளைச் செலுத்துவதற்காக அதிகாலை முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.