குடும்ப கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு உதவித்தொகை… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

தமிழகத்தில் குடும்ப நலத்திட்டம் 1956ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குடும்ப நலத்திட்டம் சமுதாய பங்கேற்புடன் செயல்படுத்தப்படுவதால் மக்கள் திட்டமாக செயல்படுத்தப்படுகின்றது. திருமணமான ஆண்கள் மத்தியில் அவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. பொதுவாகவே பெண்களை குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக ஆண் கருத்தடை சிகிச்சை ஆனது எளிய முறையில் பாதுகாப்பான வழியில் செய்யப்படுகின்றது. மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படுவதில்லை, மருத்துவமனையில் தங்க வேண்டாம், கத்தி இன்றி செய்யப்படுவதால் தழும்பு ஏற்படுவதில்லை.

எனவே இந்த எளிய ஆண் கருத்தடை சிகிச்சை முறையை திருமணம் ஆன ஆண்கள் ஏற்க செய்வதற்காக அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக வசக்டமி இரு வார விழா நடைபெறுகின்றது. இந்நிலையில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு 1100 ரூபாய் தொகையும் ஊக்குவிப்பாளர்களுக்கு 200 ரூபாயும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. எனவே ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும்படி அரசு அறிவித்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது