கிருத்திகா உதயநிதி முதல் பிரபுதேவா வரை பல பிரபலங்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகை.. இதுல அப்டி என்ன இருக்கு தெரியுமா..?

By admin on கார்த்திகை 16, 2023

Spread the love

சுவர் இருந்தால்தான் சித்திரம் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆனால், சினிமா நடிகர், நடிகைகளுக்கு நிச்சயம் பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, அவர்கள் சினிமா துறையில் சாதிக்க முடியும். அதனால் பல நடிகர்கள் உடல் ஆரோக்கியத்தில் தீவிர கவனம் செலுத்துவர். உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவர். வெளியூர்களில் படப்பிடிப்பு என்றாலும் கூட உடற்பயிற்சிகளை தினமும் செய்வர். அப்படி உடல் ஆரோக்கியத்தில் அதிக தீவிரம் காட்டுபவர்களாக எம்ஜிஆர், சிவக்குமார், கமல்ஹாசன், விக்ரம், விஜய், சூர்யா போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

 Small Grain Foods

   

அந்த வகையில், இப்போது பல நடிகர், நடிகையர் இயற்கை உணவு சிறுதானியங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா முதல் நடிகர் பிரபுதேவா வரை மாப்பிள்ளை சம்பா அரிசி, கருப்பு கவுனி, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளை விரும்பி சாப்பிடுவதாக கூறுகின்றனர். அதில் உள்ள லைக்கோபீன் என்ற சத்து, புற்றுநோயை குணப்படுத்தும், புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

   

 Small Grain Foods

 

முன்பெல்லாம் நடிகர்கள், நடிகைகள் மத்தியில் உணவு சார்ந்த விழிப்புணர்வு இருக்காது. குறிப்பாக சில நடிகர்கள், அசைவ வகை உணவுகளையே விரும்பி சாப்பிடுவர். மதுப்பழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பர். ஆனால், இப்போது பல நடிகர்கள் அதுபோன்ற நிலையில் இல்லாமல் தங்களது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன், குறிப்பாக உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாடுடன் இருக்கின்றனர். அதனால்தான் ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் வயது ஏற, ஏற இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர். சிறுதானியங்களை கொண்டு செய்யப்படும் இட்லி, தோசை, புட்டு, கஞ்சி போன்ற அயிட்டங்களை சாப்பிட்டு உடல் நலத்தை கவனித்துக்கொள்கின்றனர்.