பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘திருப்பாச்சி’, ‘சாமி’, ‘வேங்கை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர், கடந்த ஒரு வாரமாக சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று மாலை பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டுமென திரையுலகினரும் ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
