தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வரவிருக்கும் பார்ட் 2 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஜெயிலர் 2:
முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த படத்திற்கு ஹுகும் என பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனிஒருவன் 2:
கடந்த 2015-ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தார். அரவிந்த்சாமி வில்லனாக நடித்தார். தனி ஒருவன் படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு டீசர் ஏற்கனவே வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் சூட்டிங் தள்ளி போனது. விரைவில் இந்த படத்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கைதி 2:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைதி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான கைதி படம் சூப்பர் ஹிட் ஆகிய மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது கைதி படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்படும் என அப்போதே அறிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தை எடுத்து முடித்துவிட்டு லோகேஷ் கைதி படத்தில் இரண்டாவது பாகத்தை எடுக்கும் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்தார் 2:
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அந்த படத்தை பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. சமீபத்தில் தான் சர்தார் 2 படத்தின் பூஜை நடைபெற்றது இன்றிலிருந்து படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை 2:
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வடசென்னை படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தார். சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வடசென்னை படத்தின் இரண்டாவது பாகத்தையும் விரைவில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலை 2:
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் விடுதலை படத்தில் நடித்தனர். இந்த படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. விடுதலை படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். சூரிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிமாண்டி காலனி 2:
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு டிமான்டி காலனி படம் ரிலீஸ் ஆனது. முதல் படமே மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சிரிப்பும் ஹாரரும் கலந்து தரமான பேய் படங்களின் வரிசையில் டிமான்டி காலனி படம் ஒரு இடம் பிடித்தது. டிமான்டி காலனி படத்தில் இரண்டாவது பாகம் எடுக்கப்படுகிறது இந்த படத்தில் அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளார். சமீபத்தில் டிமாண்டி காலனி 2 படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.