Connect with us

தமிழ் சினிமாவில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் பி.யு. சின்னப்பா இல்லை.. இந்த பெண் தானாம்..!

CINEMA

தமிழ் சினிமாவில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் பி.யு. சின்னப்பா இல்லை.. இந்த பெண் தானாம்..!

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பேசும் படங்கள் வர ஆரம்பித்த காலத்தில் இரு பெரும் சூப்பர் ஸ்டார்களாக தியாகராஜ பாகவதரும், பி யு சின்னப்பாவும் கோலொச்சினர். பாகதவர், பாடல்கள் புராண இதிகாச படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க, பி யு சின்னப்பா ஆக்‌ஷன் மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களாக நடித்து வந்தார். அப்படி அவர் நடிப்பில் 1940 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்தான் உத்தமபுத்திரன்.

#image_title

ஹாலிவுட் படமான “தி மேன் வித் தி ஐயன் மாஸ்க்” என்ற ஹாலிவுட் திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்டது இந்த திரைப்படம்.இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களையும் சின்னப்பாவே நடித்திருப்பார்.

   

இந்த படத்தைப் பற்றி இன்றளவும் ஒரு தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது. அது என்னவென்றால் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முதலாக ஒரு படத்தில் ஒரு நடிகர் இரட்டை வேடத்தில் நடித்தது இந்த படத்தில்தான் என்று . ஆனால் அந்த தகவல் உண்மையில்லை. ஏனென்றால் இந்த படத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக ரிலீஸ் ஆன துருவன் என்ற படத்திலேயே ஒரு பெண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 1930 களில் வெளிவந்த துருவன் என்ற திரைப்படத்தில் ஒரே நடிகை குறிசொல்லும் பெண்ணாகவும், அதைக் கேட்கும் பெண்ணாகவும் நடித்துள்ளார்.

 

#image_title

இதை தமிழ் சினிமா வரலாற்று ஆய்வாளரான தியோடர் பாஸ்கரன் தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தகவலுக்கு ஆதாரமாக அப்போது முன்னணி வார இதழாக வந்துகொண்டிருந்த ஆனந்த விகடன் விமர்சனத்தில் ஒரே பெண் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதைப் பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளதைக் காட்டியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் பிரிண்ட்கள் அழிந்து போனதால் இப்போது நம்மால் அந்த படத்தைப் பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தமிழ் சினிமாவில் முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தது ஒரு பெண்தான் என்பது உறுதியாகியுள்ளது.

Continue Reading
To Top