#image_title
தமிழ் சினிமாவில் நடிகர்களை ஒப்பிடும் போது இயக்குனர்களின் சம்பளம் என்பது பத்தில் ஒரு மடங்குதான். ஆனால் ஒரு படத்துக்காக நடிகர் கொடுக்கும் உழைப்பை விட இயக்குனர் கொடுக்கும் உழைப்போ நூறு மடங்கு. 50 நாள் கால்ஷீட் கொடுத்து அதில் நடித்து முடித்துவிட்டால் அவர்களின் கடமை முடிந்துவிட்டது.
ஆனால் இயக்குனரோ பட முதல் நாளில் இருந்து ரிலீஸாகும் நாள்வரை அனைத்துப் பணிகளையும் செய்து முடித்து அதன் பின்னர்தான் வெளியேற முடியும். அதனால்தான் இயக்குனர்களை “captain of the ship” என சொல்கிறார்கள். அதனால் ஒரு படத்தின் வெற்றியில் இயக்குனரின் பங்கு மற்ற எவரையும் விட அதிகமானது.
ajith and s j suryah in vaalee
இந்நிலையில் தன்னுடைய படத்தை சூப்பர்ஹிட்டாக்கி அதன்மூலமாக தயாரிப்பாளர்களிடம் இருந்து அதற்கான பரிசுகளைப் பெற்ற இயக்குனர்களின் லிஸ்ட்டைப் பற்றி பார்க்கலாம். தமிழ் சினிமாவில் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகிவிட்டால், அந்த பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் வாங்கிக் கொடுப்பது தற்போது ட்ரண்ட்டாக உள்ளது.
அந்த ட்ரண்ட்டை தொடங்கி வைத்ததே நடிகர் அஜித்தான். அவர் நடிப்பில் வெளியான வாலி படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு பெரிய சம்பளம் எல்லாம் கிடையாது. ஆனால் படம் ரிலீஸானதும் அவருக்கு சாண்ட்ரோ கார் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்தார், அஜித். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டு அஜித்துக்குப் பாராட்டுகள் குவிந்தன.
vignesh shivan and suriya
அதன் பின்னர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய “தானா சேந்த கூட்டம்” படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், அவருக்கு தயாரிப்பு நிறுவனம் கார் ஒன்றைப் பரிசாக தந்தது. அதன் பின்னர் நீண்டகாலமாக ஒரு கமர்சியல் வெற்றிக்காகக் காத்திருந்த கமல்ஹாசனுக்கு லோகேஷ் ‘விக்ரம்’ மூலமாக ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தார். அவருக்கு தான் 80 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு காரைப் பரிசளித்தார் கமல்.
அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜெயிலர் ரிலீஸாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த போது இயக்குனர் நெல்சன், ரஜினி மற்றும் அனிருத் ஆகியோர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆடி கார்களை பரிசாகத் தந்தது.
Nithilan with maharaja team
இந்நிலையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்த மகாராஜா பட இயக்குனருக்கு இப்போது தயாரிப்பு நிறுவனம் BMW காரைப் பரிசாக வழங்கியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…