சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகர், நடிகைகள் எப்படி இருந்தாங்க தெரியுமா?…. இதோ சில புகைப்படங்கள்…

By Archana on சித்திரை 7, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர் நடிகைகளாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் பலரும் உள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளனர். அதுவே சினிமாவில் நுழைந்த பிறகு தற்போது ரசிகர்களை கவரும் விதமாக உள்ளனர். அப்படி தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தார்கள் என்பது குறித்த சில புகைப்படங்களை இதில் பார்க்கலாம்.

maxresdefault-9

   

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு சிறு வயது தோற்றத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளார்.

   

22-620fac3595979

 

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

21-6129074e77052

40 வயது ஆனாலும் இன்னும் 18 வயது இளம் நடிகை போல ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான திரிஷா. சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு விளம்பரங்கள் மற்றும் கதாபாத்திரங்களில் தோன்றிய இவர் தற்போது டாப் இடத்தை பிடித்துள்ளார்.

nazriya-nazim-unseen-amp-rare-154528229200

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நஸ்ரியா. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்தது. இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது சினிமாவிலிருந்து விலகியுள்ளார்.

soorya-1

பிரபல நடிகரான சிவகுமாரின் மூத்த மகன் தான் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களும் தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

download-3

பெண்களின் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் மேடி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் மாதவன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராக்கெட்டரி நம்பி விளைவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

1-41

தன்னுடைய கட்டுக்கோப்பான உடலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் தான் விக்ரம். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் அவ்வளவு அதிகமாக ஹிட் கொடுக்காத நிலையில் அதன் பிறகு அவர் நடித்த பல திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றனர். இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

amala

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் அமலாபால். இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் போட்டோ சூட் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு பல அட்டை படங்களில் நடித்துள்ளார்.

asin-thottumkal-141336444150

கேரளாவில் இருந்து தமிழ் திரை உலகில் நுழைந்து சாதித்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அசின். முதலில் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். தற்போது திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் இருந்து விலகியுள்ளார்.

13cbb03d-f189-4356-a8df-57c1648b6cb4

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் முதல் முதலில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.