1000 பணியிடங்கள்…. தமிழ் தெரிந்தால் போதும்… மாதம் ரூ.85,000 சம்பளத்தில் வங்கியில் வேலை…. உடனே போங்க…!

By Nanthini on சித்திரை 2, 2026

Spread the love

மத்திய அரசுக்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிண்ட் வங்கியில் (Punjab & Sind Bank) காலியாக உள்ள 1000 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer – LBO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு 65 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். அத்துடன், ஏதேனும் ஒரு வணிக வங்கி அல்லது பிராந்திய ஊரக வங்கியில் (RRB) குறைந்தது 18 மாதங்கள் அதிகாரி நிலையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.

   

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://punjabandsind.bank.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினருக்கு ரூ.850 மற்றும் எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் 20.04.2026 ஆகும்.