அந்த ரெண்டு ஹீரோயினும் போட்டி போட்டு ; இப்படியெல்லாமா பண்ணுவாங்க சார்…. சுந்தர் சி சொன்ன கதையால் ஷாக்கான தமன்னா

By Deepika

Published on:

முறை மாமனில் சினிமாவில் அறிமுகமான சுந்தர் சி தொடர்ந்து உள்ளதை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற சூப்பர்ஹிட் காமெடி படங்களை கொடுத்து ஒரு கமர்ஷியல் இயக்குனராக உருவானார். அதைத்தொடர்ந்து அருணாச்சலம் படம் மூலம் ரஜினியையும், அன்பே சிவம் படம் மூல கமலையும் இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார். இயக்குனராக இருந்த சுந்தர்சி வீராப்பு, ஐந்தாம் படை உள்பட சில படங்களிலும் நடித்தார்.

Aranmanai

அப்படியே அவரது வண்டியும் டவுன் ஆனது, மீண்டும் இயக்குனராக கோலோச்ச வேண்டும் என முடிவெடுத்த சுந்தர் சி அரண்மனை என்ற படம் மூலம் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தார். யாரும் எதிர்பாராத அளவுக்கு படம் சூப்பர்ஹிட் ஆனது. அவ்வளவு தான் அதன் வெற்றியை தொடர்ந்து அதை வைத்து இன்னும் இரண்டு பாகங்களை இயக்கி வெளியிட்டார். அனைத்தும் சூப்பர்ஹிட்டாக இப்போது அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியுள்ளார்.

   
Tamanna and rashi khanna in aranmanai 4

தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்துள்ளனர். இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து வரும் சுந்தர் சி பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி ஒரு விஷயத்தை அவர் கூறும்போது தமன்னாவே ஷாக்காகி விட்டார்.

Sundar c shares unknown secret

அவர் கூறியதாவது, இரண்டு ஹீரோயின்கள் வைத்து ஷூட்டிங் சென்றோம். அதில் ஒரு ஹீரோயின் அசிஸ்டெண்ட் சார் இந்த புடவை ஓகேவா என பச்சை புடவை ஒன்றை காண்பித்தான் நானும் சரி என்றேன். இதை பார்த்து கொண்டிருந்த இரண்டாவது ஹீரோயின் அசிஸ்டென்ட் உள்ளே சென்று ஹீரோயினுக்கு இங்கு நடந்த விஷயத்தை கூறினான். உடனே பச்சை புடவையா நாம் மஞ்சள் காட்டுவோம் அப்போது தான் ஸ்கிரீனில் நான் அழகாக தெரிவேன் என கூறி மஞ்சளை கட்டி நடித்து விட்டார்.

Tamanna and sundar c

அங்கு தான் டிவிஸ்ட் முதலில் வந்த ஹீரோயினும் இதேபோல் விஷயங்களை தெரிந்து கொண்டு சிவப்பு கலர் புடவையில் வந்து நடித்துவிட்டார். அவ்வளவு தான் இரண்டாவது ஹீரோயின் சார், இது சரியில்லை, நான் வேறு காஸ்ட்யூம் மாத்தி வருகிறேன் என கூறினார். இந்த அளவுக்கு சின்ன புள்ளத்தனமாக நடந்து கொள்வார்கள் என கூற தமன்னாவோ இப்படியெல்லாமா செய்வார்கள் என ஷாக்காகி விட்டார்கள். இதை பார்த்த நெட்டிசன்களும் எந்த படமாக இருக்கும் ? அரண்மனை, கலகலப்பு இதில் ஏதாவது ஒன்றாக தான் இருக்கும் என்றார்.

author avatar
Deepika