ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் கடந்த வாரம் எல்லையில் ஏற்பட்ட சண்டையானது நேற்று மாலை 48 மணி நேரம் சண்டை மூலமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து கைப்பற்றிய பீரங்கிகளை ஆப்கானிஸ்தான் தெருக்களில் தாலிபான்கள் ஓட்டி சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாகிஸ்தான் உடன் சண்டையின் போது ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளை கைப்பற்றியதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
This tank was pakistani which is now captured by afganistan army. Go ahead afganistan heros pic.twitter.com/5G4CmgTMjA
— ॐ Er Prince Raj 🚩 (@PrinceRaj628) October 16, 2025
மேலும் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்ததாகவும் ஆப்கானிஸ்தான் கூறியது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது. வீடியோக்களில் காணப்படும் பீரங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் தாலிபான்கள் எங்கிருந்தோ மலிவாக வாங்கிய டாங்கிகளை காட்சிப்படுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
