மேற்கு வங்காளத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் கர்நாடக மாநிலம் தலைநகர் பெங்களூரு அருகே உள்ள பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அவருடைய வீட்டில் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வீட்டிலிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களையும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் உடனே போலீசில் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணை வீட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய மர்ம கும்ப கும்பலை பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
