இனி ரேஷன் பொருட்கள் கிடைக்காது?…. 5.6 லட்சம் கார்டுகளுக்கு அதிரடி ஆப்பு…. வெளியான ஷாக் நியூஸ்…. அரசு எச்சரிக்கை….!

By Nanthini on புரட்டாதி 24, 2026

Spread the love

கேரளாவில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து, அவற்றின் ரேஷன் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ரேஷன் பொருட்கள் பெறப்படாத 5,62,494 முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் தற்போது அரசின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 4,40,811 வெள்ளை நிற அட்டைகளும், 1,21,683 நீல நிற அட்டைகளும் அடங்கும். இத்தகைய அட்டைகளுக்கான ரேஷன் விநியோகம் வரும் அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக முடக்கப்படவுள்ளது.

போலியான மற்றும் பயன்பாட்டில் இல்லாத அட்டைகளைக் கண்டறிந்து, முறையான பயனாளிகளுக்குச் சேவைகளைச் சீராக வழங்குவதற்காகவே இந்தச் சிறப்பு ஆய்வு நடத்தப்படுகிறது. அதே வேளையில், ரேஷன் விநியோகம் முடக்கப்படுவதால் கார்டுகள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுவிட்டதாகப் பொருள் கொள்ளத் தேவையில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான பயனாளிகள் தங்களின் குடும்ப அட்டையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் தேவையான வாய்ப்புகளும், தகுந்த அவகாசமும் வழங்கப்பட்டுள்ளன.

   

ரேஷன் சேவை முடக்கப்பட்ட குடும்ப அட்டையை மீண்டும் புதுப்பிக்க, அட்டைதாரர்கள் அனைவரும் அடுத்த 3 மாதங்களுக்குள் e-KYC நடைமுறையை முழுமையாக முடிப்பது அவசியமாகும். அத்துடன், குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் மொபைல் எண்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்த்து, தேவைப்படும் பட்சத்தில் புதிய எண்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாகப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த நடைமுறைகளை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றித் தங்களது ரேஷன் விநியோகத்தை மீண்டும் சீராகப் பெற முடியும்.