அரசியலில் விஜய் புலியா…? அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்…. ஒரே போடாய் போட்ட டி.ராஜேந்தர்…!!

By Devi Ramu on புரட்டாதி 22, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இப்போது மக்களை நேரடியாக சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது சினிமா பயணம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் டி.ராஜேந்தர் ஒரு பேட்டியில் கூறியதாவது, தமிழ் சினிமாவில் விஜய் காலடி எடுத்து வைத்த உடனே கதாநாயகன் ஆன உடனே ரத்னா கம்பளம் குறித்து அவரை தமிழ் திரையுலகம் வரவேற்றதா?

அப்போதே அவருக்கு இளைய தளபதி என்று பட்டம் கொடுத்து, இளைய தளபதி இனிதான் தமிழ் கலையுகத்தின் அதிபதி என்று ஏதாவது புகழ் மாலை சூட்டியதா? எவ்வளவு எல்லாம் அவரை தூற்றி இருப்பார்கள்? பலர் தூற்றியதை எல்லாம் மீறி அவர்களே போற்ற வைக்க கூடிய அளவுக்கு இன்றைக்கு புகழ் ஏணியின் உச்சத்தில் நின்று கலை உலகில் தனக்கென ஒரு தனி கொடியைப் பிடித்து காமிச்சாரே? அவர் கலை உலகத்தின் புலி இல்லையா? அரசியல் உலகத்தில் அவர் புலியா இல்லையான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல. ஆனால் சில அரசியல் கட்சிகளோட வயிற்றில் புளியை கரைச்சிட்டார் என்பது மட்டும் உண்மை என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.