சிறுநீரகங்கள் நமது உடலில் உள்ள இரத்தத்தைக் கழிவுகளிலிருந்து வடிகட்டி வெளியேற்றும் மிக முக்கியமான உறுப்புகளாகும். இந்த வடிகட்டி அமைப்பில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட முழு உடலையும் மோசமாகப் பாதிக்கலாம். சிறுநீரகப் பாதிப்பு இருக்கும்போது, அது சில குறிப்பிட்ட பகுதிகளில் வலியை ஏற்படுத்தும், இந்த வலிகளை அலட்சியம் செய்வது கடுமையான விளைவுகளை உண்டாக்கும்.
சிறுநீரகச் செயலிழப்பின் முக்கிய அறிகுறியாகக் கைகள் மற்றும் கால்களில் திடீரென வீக்கம் ஏற்படுவது இருக்கலாம். மேலும், சிறுநீரகங்கள் உடலின் பின்புறப் பகுதியில், விலா எலும்புகளின் அடிப்பகுதிக்குக் கீழே அமைந்திருப்பதால், விலா எலும்புப் பகுதியில் ஏற்படும் தீவிரமான வலி அல்லது சாதாரணமாக இல்லாமல் உட்காருவதற்கோ/நிற்பதற்கோ சிரமம் அளிக்கும் கடுமையான முதுகு வலி போன்றவற்றைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
சிறுநீரகச் சேதம் சில நேரங்களில் மார்புப் பகுதியில் கூட வலியை ஏற்படுத்தலாம். சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும்போது, அது இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வில் வீக்கத்தை (பெரிகார்டியம்) ஏற்படுத்தலாம், எனவே மார்பு வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படாததால், சோர்வு, பசியின்மை, சிறுநீர் கழிப்பதில் மாற்றம் போன்ற பிற அறிகுறிகளிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.
