இசைஞானி என்று சினிமா இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா 50 ஆண்டு காலமாக இசை சக்ரவர்த்தியாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி லண்டனில் தனது வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். ஆசியா கண்டத்தில் சிம்பொனியை அவரே எழுதி இசையமைத்து சர்வதேச அளவில் அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இளையராஜா படைத்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சிம்பொனி அரங்கேற்றம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. சென்னையில் வரும் மே மாதம் 30ம் தேதி சிம்பொனி நிகழ்ச்சி அரங்கேற உள்ளது. விரைவில் நிகழ்ச்சி நடைபெறும் இடம், நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு தேதி, டிக்கெட் கட்டணங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்பு வெளியாகும். சென்னையில் முதன்முறையாக இளையராஜாவின் முதல் சிம்பொனி அரங்கேற உள்ளதால் அவரது இசை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
