BIG BREAKING: பதவியேற்பு விழா ரத்து… விஜய்க்கு காலையிலேயே அடுத்த ஷாக்…. அவசர ஆலோசனை…!

By Nanthini on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் இதுவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காததே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று காலை 10 மணிக்குள் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் எனத் தலைவர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலைத் தொடர்ந்து, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் சட்டரீதியான வாய்ப்புகள் குறித்து மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் மற்றும் முக்கிய சட்ட வல்லுநர்களுடன் கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.