swasika

எனக்கு 33 வயசு தான்… 34 வயசான ஹரிஷ்க்கு மாமியாரா நடிக்க ஒத்துக்கிட்டது இதனால தான்.. ரகசியத்தை பகிர்ந்த ஸ்வாசிகா…

By admin on மார்கழி 11, 2024

Spread the love

ஸ்வாசிகா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள சினிமாவிலும் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் நடித்துள்ளார் மற்றும் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான வைகை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான கோரிப்பாளையம் என்ற படத்தில் நடித்தார். அதில் இவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். 2012 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு ஸ்வாசிகா மலையாள சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு அமையவில்லை.

   

தற்போது சமீபத்தில் இந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் அவர் திருப்புமுனையை பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவரது கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும் இருந்தது பாராட்டுகளும் கிடைத்தது.

 

இந்தத் திரைப்படத்தில் இவர் கதாநாயகியின் அம்மாவாகவும் ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாராகவும் நடித்திருந்தார். இது சம்பந்தமாக ஒரு நேர்காணலில் அவர் பேட்டி கொடுத்திருக்கிறார். எனக்கு வயது 33 தான் ஆகிறது 34 வயதாகும் ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாராக நடிக்க ஏன் ஒத்துக் கொண்டீர்கள் என்று கேட்கிறார்கள்.

ஏன்னென்றால் அந்த கதாபாத்திரத்தை தான் மிகவும் விரும்பினேன். அது மட்டுமல்லாமல் இயக்குனர் நான் வரும் முதல் சீனில் டிராக்டரில் கிரவுண்டை காலி செய்வது போல் இருக்கும் என்று கூறினார். அதைக் கேட்ட உடனே இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். ஏன்னா இந்த மாதிரி ஒரு என்ட்ரி சீன் எந்த நடிகைக்குமே கிடைக்காது அதனால் தான் நடித்தேன் என்ற ரகசியத்தை கூறியிருக்கிறார் ஸ்வாசிகா.