தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மூலம் நடிகர் சுஷாந்த் சிங்க் பிரபலமானார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி தான் தங்கி இருந்த அப்பார்ட்மெண்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தியை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் பரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததும், அவர் சுஷாந்திற்கு போதை பொருள் சப்ளை செய்ததும் whatsapp சேட் மூலம் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பிறகு ரியா ஜாமினில் வெளியே வந்தார். சமீபத்தில் ரியா ஒரு பேட்டியில் கலந்து கொண்டு விமர்சனங்கள் குறித்து பேசினார். அப்போது ரியா கூறியதாவது, என்னை சூனியக்காரி என்று அழைக்கின்றனர். சுஷாந்த் சிங்கை நான் சூனியம் செய்தோ, மயக்கியோ கொலை செய்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். கடைசிவரை அவர்களுக்கு நான் சூனியக்காரியாகவே இருந்து விட்டுப் போகிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு நுழையும் போது அனைவரும் என்னை பார்த்த பார்வையே அதற்கு சான்று. ஜாமீன் கிடைத்த பிறகு சிறை காவலர்களுடன் நடனம் ஆடியது என்னால் மறக்க முடியாது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் போதை பொருள் சப்ளை செய்தது குறித்தும், மாபியா கும்பல் குறித்தும் ரியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரியா எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

