தமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் சூர்யா மற்றும் சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆய்த எழுத்து. இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஈஷா தியோல். இந்த படத்தில் சூர்யாவுடன் இவர் சேர்ந்து நடித்தது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் ஈஷா தியோல் நடித்திருந்த நிலையில் தனது முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

தமிழில் மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட நிலையில் அதிலும் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் பல விருதுகளை பெற்ற நிலையில் ஈஷா தியோல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டார். இவர் பிரபல பாலிவுட் பிரபலம் தர்மேந்திரா மற்றும் ஹேமமாலினி தம்பதியின் மகள். முதன் முதலில் இவர் 2002 ஆம் ஆண்டு ஒரு இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
/movietalkies/media/post_attachments/wp-content/uploads/2024/02/esha-bharat-seperate-news.jpg)
அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல திரைப்படங்களில் கலக்கி கொண்டிருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் மற்றும் சல்மான்கான் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருடைய பெற்றோர்கள் இருவரும் புகழ் பெற்ற நடிகர்கள் என்பதால் எளிதில் சினிமாவில் நுழைந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

முதலில் ஒரு மாடல் அழகியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இவர் அதன் பிறகு பெற்றோர்களின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். தற்போது தொடர்ந்து பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பாரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய திருமண மும்பையில் உள்ள இஸ்கான் கோவில்களில் எளிமையாக நடந்து முடிந்தது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுமார் 11 வருடம் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த இவர் கடந்த வருடம் தனது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரை இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூர்யா பட நடிகையா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
