“அடுத்த குறி இதுதான்.. அதை யாராலும் தடுக்க முடியாது” வேட்டையாடுவது உறுதி… சூர்யகுமார் யாதவ் செய்த சபதத்தால் மிரண்டு போன கிரிக்கெட் உலகம்…!!

By Soundarya on பங்குனி 10, 2026

Spread the love

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் சொந்த மண்ணில் இந்த வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. போட்டிக்குப் பிறகு பேசிய அவர், இந்த வெற்றிப் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், தங்களின் அடுத்த முக்கிய இலக்கு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் என்றும் அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ள நிலையில், அதில் தங்கம் வெல்வதே ஒட்டுமொத்த அணியின் தற்போதைய கனவு என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2028-ல் நடைபெறவுள்ள அடுத்த டி20 உலகக் கோப்பையிலும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கப் போவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அவர் ஓய்வு பெறப்போவதாக எழுந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ள சூர்யகுமார், இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணியை வழிநடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

   

இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 255 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52) மற்றும் இஷான் கிஷன் (54) ஆகியோரின் அதிரடி ஆட்டமும், ஜஸ்பிரித் பும்ராவின் (4/15) அபாரப் பந்துவீச்சும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் வழிகாட்டுதலில் இந்திய அணி ஒரு புதிய ஆக்ரோஷமான பாணியில் விளையாடி வருவதாகவும், இது தொடரும் என்றும் சூர்யகுமார் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.