நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து வெற்றிமாறனுடன் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு சூரரை போற்று கூட்டணியுடன் உருவாகும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் ரசிகர்களை தெறிக்கவிட்டது. எனவே ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முழு படமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி என்றாலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடிக்க சூர்யா தற்போது கமிட் ஆகியுள்ளார். ஜெயலர் படம் கிட்டத்தட்ட 650 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்தது. அந்த வசூலை முறியடிக்கும் நோக்கத்தில் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரபல இயக்குனர் ஓம் பிரகாஷ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். மகாபாரத கதையை தழுவி எடுக்க உள்ள இந்த படத்தில் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரவி வர்மா தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சூர்யா ஏற்கனவே கமிட்டான சுதா கொங்கரா மற்றும் வாடிவாசல் படங்களை முடித்த பிறகு தான் இந்த படத்தில் நடிக்க உள்ளார். வருகிற 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பாதுகாப்பான முதலீட்டையும் நிலையான லாபத்தையும் எதிர்பார்க்கும் சாமானிய மக்களுக்கு, தபால் நிலையத்தின் 'டைம் டெபாசிட்' திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.…
தங்கத்தைப்போலவே இனி வெள்ளி நகைகளுக்கும் தரம் சார்ந்த 'ஹால்மார்க்' முத்திரையைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அண்மைக்காலமாக வெள்ளியின்…
யுபிஎஸ்சி (UPSC) குடிமைப்பணித் தேர்வின் முதன்மை கட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் அகில…
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் காட்டும் கவனத்தை, எதனை எதனுடன் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பதிலும் காட்ட…
பெங்களூருவில் தினமும் 4 பைக்குகளைத் திருட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்த நான்கு பேர் கொண்ட பலத்த…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி பேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி,…