வா ஜோ.. நம்ம சேர்ந்து வொர்க் அவுட் பண்ணலாம்.. மனைவியுடன் தீவிர work-out-ல் இறங்கிய நடிகர் சூர்யா..!!

By Priya Ram on ஏப்ரல் 2, 2024

Spread the love

பிரபல நடிகரான சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட நாள் முதல் இன்று வரை மாறாத இவர்களது காதலை பார்த்து வியந்தவரகள் உண்டு.

   

சினிமாவில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர். ஜோதிகா தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்தார்.

   

Surya

 

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நடிகை ஜோதிகா குடும்பத்தையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ஜோதிகா சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் அஜய் தேவன், மாதவன் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

Surya

இதே போல சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் சூர்யா நடித்த கங்குவா படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் சூர்யாவும் ஜோதிகாவும் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதில் தவறியதில்லை. இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது கணவருடன் இணைந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)