தமிழ் சினிமாவில் முன்னணி காதல் ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இதனிடையே திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட ஜோதிகா மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார். தொடர்ந்து சூர்யாவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காக்க காக்க. இந்த திரைப்படம் வெளியாகி இந்த வருடத்துடன் 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் எடிட்டிங் என அனைத்தும் இன்றளவும் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்தில் சூர்யா ஏசிபி என்ற அன்பு செல்வன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் காக்க காக்க திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்த படம். அன்புச்செல்வன் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பார்.
காக்க காக்க படத்தின் இளம் கன்றுகளாக தொழில்நுட்ப கலைஞர்கள், இந்த திரைப்படம் தொடர்பாக என்னிடம் முதலில் பேசிய ஜோதிகா என்னுடைய சக நடிகர்கள் மற்றும் கௌதம் மேனன் ஆகியோருக்கு நன்றி என குறிப்பிட்டு நினைவுகளை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…