#image_title
சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகர் ஆவார். இவரின் தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர் மற்றும் இவரது இளைய சகோதரர் கார்த்திக் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது.
1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சூர்யா. 2002 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து பிதாமகன் மௌனம் பேசியதே காக்க காக்க கஜினி ஆறு சில்லுனு ஒரு காதல் வேல் போன்ற பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் சூர்யா.
சமீபத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வெளியாகி ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது. இவரது கதாபாத்திரமும் நடிப்பும் மிகுந்த பாராட்டுகளை பெற்றது. அடுத்ததாக RJ பாலாஜி இயக்கும் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அது கூடவே பாலா திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த வெற்றி விழாவும் நடைபெறுகிறது. இந்த வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான். சிறிது சூட்டிங் நடந்த பின்பு ஏற்பட்ட மனக்கசப்பினால் சூர்யா திரைப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
ஆனால் இன்று நடைபெறும் பாலாவின் விழாவில் சூர்யாவும் சிவகார்த்திகேயனும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதனால் பழசை மறந்து விட்டு பெருந்தன்மையுடன் பாலாவின் விழாவில் சூர்யா கலந்து கொள்கிறார் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். அவரது இந்த செயலுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…
பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…
கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…
கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…