நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமாகிய சூர்யா அவர்கள் பூவை கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, ஃபிரண்ட்ஸ், பெரியண்ணா போன்ற படங்களில் நடித்த தமிழ் திரையுலகில் தன் முகத்தை பதித்தார் ஆனால் என்னமோ அவருக்கு இப்ப படங்கள் அனைத்தும் சரியாக போகவில்லை ஆதலால் சூர்யா என்ற பெயரை கேட்டாலே இயக்குனர் அனைவரும் பின்வாங்குவார்கள் தவிர எவரும் முன்வந்து இவரை வைத்து இயக்க மாட்டார்கள். சூர்யா அவர்களுக்கு சரியாக படம் போகாமல் இருந்து,
தன் உடன் இருக்கும் சக திரை நண்பர்களே இவரை பார்த்து ராசி இல்லாத நாயகன் என்று அழைப்பார், இதை கண்ட சூர்யா அவர்களுக்கு மிகவும் மனம் வருத்தத்தில் இருந்த சமயத்தில் தான், தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகரும் பொழுது இயக்குனர் பாலாவை சந்தித்தார், இயக்குனர் பாலா அவர்கள் சூர்யாவை வைத்து நந்தா என்ற மாபெரும் படப்பை சூர்யா அவர்களுக்கு பரிசளித்தார், அப்படம் தான் அவர் கரியரை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது, அதன் பின் அவர் பல படங்கள் நடித்து பாலாவுடன் மீண்டும் பிதாமகன் விக்ரம் சூரியமும் இணைந்து ஒரு கண்ணிமையை இமைக்க முடியாமல் அப்படத்தை பார்க்க வைத்தார்கள்.
சிவக்குமார் எனும் மாபெரும் திரை துறையின் நட்சத்திரமாக இருக்கும் அவரின் மகனாகவும், இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் ப்ரொடக்ஷன் மூலமாகவும், நந்தா அவர்களின் முதல் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், சூர்யா அவர்களால் தமிழ் திரை உலகில் பெரிதாக சாதிக்க முடியாமல் இருந்தார், அவர் பாலாவுடன் இணைந்த பணியாற்றிய பின் தான் அவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்தார், என்னதான் இன்னார் பையன் என்று வாரிசாக ஒரு திரைத்துறையில் கால் எடுத்து வைத்தாலும் முதல் நாளிலேயே ஹீரோவாகியும் முடியாது, அதே போல் தான் சூர்யாவும் பல வருடங்கள் மிகவும் போராடி அவர் திறமையை அவரை செதுக்கி இந்த இடத்திற்கு வந்துள்ளார், தற்போது நிலையில் சூர்யாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.