இது என்னடா சூர்யா, கார்த்திக்கு வந்த சோதனை.. அண்ணன் தம்பிக்கு ஒரே மாதிரி இப்படியா நடக்கணும்..?

By Nanthini on வைகாசி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கியவர் தான் சிவகுமார். இவரைப் போலவே இவருடைய மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக சூர்யாவுக்கு சரியான ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை என்றாலும் கார்த்தி ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகின்றார். இப்படி இருக்க சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்கும் சொல்லி வைத்ததைப் போல ஒரு கசப்பான நிகழ்வு சினிமாவில் நடந்துள்ளது. அதாவது நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் மெய்யழகன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் வரை எமோஷனலான கதை காலத்துடன் அமைந்திருந்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றது.

சூர்யாவும் கார்த்தியும் முதன்முறையாக இணையும் படம் - தெலுங்கு360

   

ஆனால் அந்த சமயத்தில் இந்த படத்திற்கு போட்டியாக தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்த லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி இருந்தது. மெய்யழகன் திரைப்படம் என்னதான் நல்ல கதை களத்துடன் இருந்தாலும் அந்த சமயத்தில் ரசிகர்களின் கவனம் அனைத்தும் லப்பர் பந்து திரைப்படம் பக்கம் தான் திரும்பியது. இந்தத் திரைப்படம் மூலம் தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட்டை விட பலத்த லாபம் பார்த்தது. இந்தத் திரைப்படத்தால் மெய்யழகன் திரைப்படம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் சென்றடையவில்லை என்பதுதான் கவலைக்குரிய ஒன்று.

   

மெய்யழகன் மற்றும் லப்பர் பாண்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்: கார்த்தி மற்றும்  அரவிந்த் சுவாமி நடித்த படம் வேகம் குறைந்தது; ஹரிஷ் கல்யாணின் ...

 

தம்பிக்கு தான் இப்படி நடந்து விட்டது என்றால் அண்ணனுக்கும் அதே போன்ற சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. அதாவது சூர்யா கடந்த சில வருடங்களாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இறுதியாக வெளியான கங்குவா திரைப்படம் மூலமாகவும் பெரும் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான கண்ணாடி பூவே மற்றும் கனிமாகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

ரெட்ரோவை அடித்துக் காலி செய்த டூரிஸ்ட் ஃபேம்லி… பிரபலம் சொல்லும் ஆச்சரிய  தகவல் - Cinereporters

ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போலவே படம் நல்ல கதை களத்துடன் அமைந்திருந்த நிலையில் இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்து வருகிறது. ரெட்ரோ படத்திற்கு தடையாக இந்த படம் வெளியானதால் ரெட்ரோ திரைப்படத்தின் கதை நன்றாக இருந்தும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தால் அந்த படம் அவ்வளவாக ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகாமல் போய்விட்டது. சொல்லி வைத்ததைப் போல அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது எதிர்பார்க்காத ஒன்றுதான்.