Categories: சினிமா

வாரணம் ஆயிரம் படத்தின் கதையை மாற்றிய கௌதம்… அப்போது நம்பிய சூர்யா.. ஆனால் துருவ நட்சத்திரத்தில் கைவிட்டது ஏன்?

Spread the love

தமிழ் சினிமாவில் மணிரத்னத்துக்குப் பிறகு உயர் மத்தியதர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கை மிகவும் ஸ்டைலிஷாக படமாக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் கௌதம் மேனன். அவர் மாதவன், ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.

அதன் பின்னர் அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றன. தன்னுடைய சில ஹிட் படங்களை அவர் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்தார்.

அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் பல சிக்கல்களில் மாட்டி 7 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கிறது. அந்த படத்தை அவரே தயாரித்ததால் பொருளாதார சிக்கல்களில் மாட்டியுள்ளார். அதன் காரணமாக அவர் தன்னுடைய திரைவாழ்க்கையில் பல பின்னடைவை சந்தித்து, நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தனக்கு நடிகனாக இருப்பது பிடிக்கவேயில்லை என்றும் அவர் கூறி வருகிறார்.

இந்த கதையை கௌதம் சூர்யாவுக்கு சொல்லி அவரும் நடிப்பதாக ஓகே சொல்லி பின்னர் கதையை முழுவதுமாக முடிக்காததால் அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது சம்மந்தமாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும்போது கௌதம் மேனன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இது சம்மந்தமாக இருதரப்புக்கும் ஆதாரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கௌதம், தனக்கு முழுக் கதையையும் சொல்லாததுதான் காரணம் என துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து விலகும்போது தெரிவித்திருந்தார். ஆனால் இருவரும் இணைந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மொத்தக் கதையையுமே கௌதம் மாற்றியபோதும் சூர்யா அவரை நம்பி நடித்துக் கொடுத்தார்.

முதலில் வாரணம் ஆயிரம் படத்தின் கதையே ஒரு ஆக்‌ஷன் படமாகதான் உருவாக இருந்தது. ஆனால் இடையில் கௌதம் மேனனின் அப்பா இறந்துவிடவே அது சம்மந்தமான ஒரு தந்தை மகன் இடையிலான உறவைப் படமாக்கலாம் என கௌதம் சொன்னபோது அதை அப்படியே ஏற்று இரண்டு ஆண்டுகள் காத்திருந்து  நடித்துக் கொடுத்தார் சூர்யா.

vinoth

Recent Posts

“கடைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்கயா?”…. உ.பி-யில் காதலனுடன் உலா வந்த மனைவியை சுட்டுத் தள்ளிய கணவன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணத் திற்குப் புறம்பான உறவுச் சந்தேகத்தின் பெயரில் கணவனே தனது மனைவியையும் அவரது ஆண்…

4 minutes ago

அதிர்ச்சி..! கனவுகளோடு மாணவி… நடன மேடையில் ஜொலித்த பெண்… விவேக் எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்… தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சோகம்…!!

கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அசாமிலிருந்து நடனக் குழுவினருடன் விசாகப்பட்டினம் சென்ற குவாஹாட்டி பி. பருவா கல்லூரி மாணவி ஹிமாஸ்ரீ…

11 minutes ago

“விஜய்யை சீண்டிய நாஞ்சில் சம்பத்?”…. கட்சியை விட்டு ஓட்டம் பிடிக்கிறாரா மிரட்டல் பேச்சாளர்… தவெக-வில் கிளம்பிய அடுத்த பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளராகப் பணியாற்றி வரும் நாஞ்சில் சம்பத் குறித்து சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு…

11 minutes ago

குஷியோ குஷி…. தீபாவளி பரிசு…. அனைவருக்கும் வங்கி கணக்கில் பணம்…. சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் விஜய்….!

2025-26ஆம் அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.603.34…

18 minutes ago

“மளிகைக் கடையில் திடீர் தீ விபத்து….” தாயும், 5 வயது மகளும் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் கணவர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில், அங்குள்ள ஒரு வீட்டின் தரைதளத்தில் இயங்கி வந்த மளிகைக் கடையில் வியாழக்கிழமை காலை…

20 minutes ago

ஷாக் ஆயிடுவீங்க!… சைக்கோ தாயா?… குழந்தைகளை தாக்கிய பெண்… தங்கை காப்பாத்த முயன்ற அண்ணன்… நெஞ்சை பதறவைக்கும் உண்மை சம்பவம்…!!

தென் கரோலினாவின் ஸ்பார்டன்பர்க் நகரில் தாயொருவரால் தன் பிஞ்சுக் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஒட்டுமொத்த மனித மனசாட்சியையும்…

21 minutes ago