தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.
திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அப்போது எம் ஜி ஆரின் ஆஸ்தான கவிஞராகி முன்னணிப் பாடல் ஆசிரியர் ஆனார் வாலி.
வாலியைப் பொறுத்தவரை எப்போதுமே அவர் இரண்டாம் ரேங்க் எடுக்கும் மாணவர்தான். கண்ணதாசன், வைரமுத்து மற்றும் நா முத்துகுமார் உள்ளிட்டவர்கள் அந்தந்த சீசனில் முதல் ரேங்க் எடுப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லோர் காலத்திகும் வாலிதான் செகண்ட் ரேங்க். வாலி இறப்பதற்கு முன் 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். அதில் பல பாடல்கள் கமர்ஷியல் பாடல்கள்.
அதே போல பாடல்களை எழுத உட்கார்ந்தால், தன்னால் முடியவில்லை என்று சொல்லி வாலி எழுந்ததே இல்லை என்பார்கள். அதனால்தான் வாலியை அதிகமான பாடல்கள் எழுத இளையராஜா பயன்படுத்தினார். இந்நிலையில் வாலி பற்றி ஒரு சுவாரஸ்யத் தகவல்.
கங்கை அமரன் எழுதிய வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் ஒரு பாடல் முழுவதும் உதடுகள் ஒட்டாமல் பாடுவது போல வார்த்தைகளை எழுத வேண்டும் என்ற சூழல். அப்படி ஒரு பாடலை எழுத முடியுமா என்ற சவாலை ஏற்று வாலி எழுதிய பாடல்தான் ‘தந்தேன் தந்தேன் இசை தந்தேன்’ என்ற பாடல்.
பாடல் வரிகள்
தென்றல் வந்து ஆ… இல்லையே வந்து ஒட்டுதே
அந்த தேரடியில் ஹான்… இது பரவாயில்லை
சின்ன கன்னிப்பெண்ணை
அய்யயோ பெண்ணை ஒட்டுதே தள்ளி நில்லு
அஞ்சி அஞ்சி கெஞ்சி கெஞ்சி ஹான்
செஞ்சி செஞ்சி இஞ்சி இஞ்சி
இஞ்சி இஞ்சி இஞ்சி இஞ்சி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே….
ஆனந்த ராகங்களை கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட எதுக்கடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே…
ஏழைகள் காதுகளில்
செந்தேன் அள்ளி சேர்க்கிற கலைஞனடி
தென்னாட்டுல இருக்கிற
இதயங்களை சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி
நாட்டுல கேட்டுக்கடி இசையில்
இங்கு நான் செஞ்ச சாதனைதான்
நாக்குல இருக்குதடி எடுத்து தர
ஆயிரம் கீர்த்தனைதான்
அலை அடிக்க அதை தடுக்க
அணை எடுக்க நினைத்ததென்ன
தள்ளு எட்டி நில்லு எல்லை தாண்டுற
சீண்டுற ஏண்டி நீ அளக்குற
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே…
ஆனந்த ராகங்களை கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி ஹே ஹே
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட எதுக்கடி ஹே ஹே
நீ இங்கு கேட்டதில்லே அந்நாளிலே
கிந்தனின் சரித்திரத்தை
திண்டாடிய நாட்டுக்கு இசையினிலே
தந்தானடி என்எஸ்கே தன் கருத்தை
தேசத்தை திருத்திடத்தான்
கலைகள் என்று தெரிந்தது சேதியடி
நான் அந்த கலைஞனையே
நினைத்து இங்கு நடக்குற ஜாதியடி
எனை அடக்க சிறை எடுக்க
சிறகடித்த இளையக்கிளி
இன்று எதிர் நின்று இந்த காளையை
காண்கையில் கால் கைகள் நடுங்குது
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே…
ஆனந்த ராகங்களை கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட எதுக்கடி
தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…
சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…