கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் ஜனவரி 23ஆம் தேதி ரிலீசான திரைப்படம் டாமினிட் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். இந்த படம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் படத்தை தயாரிக்கவும் மம்முட்டி ஒப்பு கொண்டதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. படம் ஜனவரி 23 ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் படம் குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் புளூ சட்டை மாறன்தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார் .
அதாவது இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,” படத்தின் கதையை பொறுத்த வரை கதாநாயகன் முன்னாள் போலீஸ் அதிகாரி. அவர் காவல்துறையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வேலையை விட்டு வெளியே வந்து தன்னுடைய சொந்தமாக தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். வீட்டு வாடகை கூட தர முடியாத அளவிற்கு தன்னுடைய தொழிலை மிகவும் கஷ்டப்படுத்தி நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் அவருடைய ஹவுஸ் ஓனர் எனக்கு ஒரு லேடிஸ் பர்ஸ் கிடைத்துள்ளது.
இது யாருடையது என்று தேடி கண்டுபிடித்து கொடுத்தால் நீ எனக்கு தர வேண்டிய வாடகை கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறார். அதன்பிறகு இந்த பர்ஸ்சை யாருடையது என்பதை தேடி கண்டுபிடித்து விடுகிறார். அந்த பர்ஸ் ஒரு பெண்ணினுடையது. அந்தப் பெண் காணாமல் போய் பல நாட்கள் ஆகிறது. அந்த பெண் எப்படி காணாமல் போனார்? ஏன் காணாமல் போனார்? என்பதுதான் படத்தின் கதை. பர்ஸ் யாருடையது என்று தேட தொடங்கியதில் இருந்து சிறு சிறு டிவிஸ்ட், காமெடி என சுவாரசியமாக இருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் படத்தின் கதை வேறு. வேறு ஒரு படத்தின் கதையை போல் உள்ளது என்ற எண்ணம் வந்துவிட்டது. கதை நகர்வதை பார்க்கும் போது படம் அங்கு தான் போய் நிற்குமோ என்று யூகிக்கமுடியுது. அதேபோல படமும் அங்கே போய் தான் நின்றது. இந்த படத்தை விட தமிழில் மிகச் சிறப்பாக பொம்மலாட்டம் படம் வந்துள்ளது . சமீபத்தில் கூட திட்டம் இரண்டு என்ற படமும் வந்தது. படத்திலிருந்து சஸ்பென்ஸ் படம் முடிவதற்கு முன்பே கூறி விட்டார்கள். பொம்மலாட்டம், திட்டம் இரண்டு படம் பார்க்காதவர்களுக்கு இந்த படம் சுவாரசியமான படமாக இருக்கும்” என்று கூறி யுள்ளார்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…